போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்
28 Friday Jul 2017

ஹைதராபாத்: போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கான் சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று ஆஜரானார். போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகை முமைத் கானுக்கு தெலுங்கானா போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். போதைப் பொருள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.

 

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முமைத் கான் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு ஹைதராபாத் வந்துள்ளார். மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் தான் தெலுங்கு பிக் பாஸ் வீட்டு உள்ளது. ஏற்கனவே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சம்பூர்ணேஷ் பாபு உடல்நலக் குறைவு காரணமாக வெளியேறினார். இதையடுத்து விசாரணைக்காக முமைத் கானும் வெளியேறுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் முமைத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறவில்லை.

 

மாறாக விசாரணைக்காக ஒரு நாள் அனுமதி பெற்று ஹைதராபாத் வந்துள்ளார். பிக் பாஸ் விதிகளின்படி எந்த போட்டியாளரும் இடையே வெளியே சென்று வர முடியாது. முதல்முறையாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    More Latest Events..

கார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்
விஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்
வைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
கமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்
கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம்
25 வருடத்தில் முத்திரை பதித்த முக்கிய நாள்! விஜய் ஸ்பெஷல் - ரசிகர்கள் கொண்டாட்டம்
பூஜையுடன் தொடங்கிய ஹிப்ஹாப் ஆதியின் அடுத்த படம்
ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ‘இரும்புத்திரை’!
சூர்யா ரசிகர்களுக்கு இன்று சிறப்பு விருந்தளிக்கும் படக்குழு
ராதாரவியை நீக்கிய வழக்கு: விஷால் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு