நடிகர் சங்கக் கட்டடத்தில் என் கல்யாணம் தான் முதல் ஃபங்ஷன் - விஷால் 'குஷி 'அறிவிப்பு
28 Friday Jul 2017

சென்னை: நடிகர் சங்கக் கட்டடத்தில் என் திருமணம் தான் முதல் நிகழ்வாக இருக்கும் என நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனையைடுத்து நடிகர் சங்க வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷால், நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்படக் கூடாது என தடை வாங்கியவர்கள் மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. தடை நீங்கியுள்ளதால் கட்டடப் பணிகள் விரைந்து நடக்கும். கட்டடத்தின் அடித்தள பணிகள் நிறைவடைந்துவிட்டது. மீண்டும் கட்டடத்தை எழுப்பும் வேலைக்கு புதிதாக டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும். நடிகர் சங்கத்தில் எல்லா விஷயங்களும் அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே நடக்கிறது. அதனால் இதில் ஏதேனும் ஊழல் நடக்குமா என யாரும் விழித்திருந்து பார்க்கும் தேவை இல்லை.

 

கட்டடப்பணி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிதாக எழும்பும் நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் நிகழ்வாக என் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என விஷால் கூறினார். அப்போது துணை தலைவர் பொன்வண்ணன் உள்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் உடன் இருந்தனர்.

 

 

    More Latest Events..

கமலின் அடுத்த படம் 'தலைவன் இருக்கிறான்': ட்வீட்டுகளுக்கும், இதற்கும்...#ThalaivanIrukkiran
போதைப் பொருள் விசாரணை: நடிகை முமைத் கானுக்காக விதிகளை தளர்த்த பிக் பாஸ்
லண்டனில் இருந்து மும்பை வந்த காதலர்: ஸ்ருதிக்கு விரைவில் திருமணம்?
ஃபெப்சின்னா என்ன? தமிழ் சினிமாவில் என்னதான் பிரச்சினை?
என்னை பார்த்தா இழிச்ச வாய் மாதிரி தெரியுதா?:
ஓசியில் ரூ 60 ஆயிரத்துக்குக் குடிக்கிறார் நடிகை... இதுக்கு என்ன தீர்வு விஷால்? - சுரேஷ் காமாட்சி
40 ஆண்டு கால பிரச்சினையை 4 மாதங்களில் தீர்க்க முடியுமா? விஷாலின் அறிவிப்புக்கு ஃபெப்சி கடும் கண்டனம்
நடிகையின் கசமுசா புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் காதலர்
'போதை' மேனேஜர் கைது: அப்படியே 'ஷாக்' ஆன நடிகை காஜல் அகர்வால்
தமன்னா இனிமேல் டாக்டர் தமன்னா...!