ஜூலியை அடிம்மா ஓவியா: ஐடியா கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
27 Thursday Jul 2017

சென்னை: ஜூலியை அடிக்குமாறு ஓவியாவுக்கு ஐடியா கொடுத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வரும் திரையுலக பிரபலங்கள் ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் காயத்ரி மற்றும் ஜூலியை கண்டாலே பிடிக்கவில்லை. இது குறித்து நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீப்ரியா, மீஷா கோஷல் ட்வீட்டியிருப்பதாவது,

 

ஓவியா தயவு செய்து வெளியே வாங்க...நம் குடும்பத்தார் போன்று வரவேற்க மொத்த தமிழ்நாடே காத்திருக்கிறது...அவர் அழுவதை பார்க்க முடியவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்டியுள்ளார்.

 

ஓவியா அடி மா நீ அவள ஜூலியை #OviyaArmy என்று எமோஷனலாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

காயத்ரி ஓவியாவை பார்த்து நீ யாரு, நீ யாருன்னு கேட்கிறார். நான் காயத்ரியை கேட்கிறேன் நீ யாரு? என்று நடிகை மீஷா கோஷல் ட்வீட்டியுள்ளார்.

 

பெண்னை கண்டால் பேயும் இறங்கும்னு சொல்லுவாங்க... இங்க பேயை கண்டு பெண் இறங்குதே...காலக்கொடுமைடா சாமி என நடிகை ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.

 

 

    Related News