எங்களுக்கு வெள்ளம் வேண்டா, ஓவியா மதி.. பைத்தியம் எப்படி முத்திப் போச்சு பாருங்க!
28 Friday Jul 2017

சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்கள் கடந்த சில நாட்களாகவே ஒரு மாதிரியாகத் தான் திரிகிறார்கள். காசு பணம் துட்டு மணி மணி மற்றும் புகழுக்காக நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஸ்கிரிப்ட்படி நடந்து கொள்கிறார். அழச் சொன்னால் அழுகிறார், கடலை போடச் சொன்னால் செய்கிறார், சிரிக்கச் சொன்னால் செய்கிறார். கொடுத்த காசுக்கு சரியாக நடிக்கிறார்.

 

பிக் பாஸ் வீட்டில் நடப்பது எல்லாம் என்னவோ நிஜமாகவே நடப்பது போன்று நினைத்து ஓவியாவுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் ஓவியா ஆர்மியை உருவாக்கி வைத்துள்ளது.

 

எந்த காசுக்காக ஓவியா நடிக்கிறாரோ அதே காசுக்காக நடிக்கும் ஜூலியை ஓவியா ஆர்மிக்காரர்கள் கழுவிக் கழுவி ஊற்றி வருகிறார்கள். ஜூலியை பிக் பாஸ் வீட்டை விட்டு விரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளது ஓவியா ஆர்மி.

 

நான் கேரள முதல்வரைப் பார்த்து கேட்கிறேன்.. எங்களுக்கு கேரளாவிலிருந்து தண்ணீர் ஏதும் வேண்டாம், தோழி ஓவியாவை மட்டும் கொடுங்கள் போதும். பதிலுக்கு நாங்கள் ஜூலியை கொடுக்கிறோம் இலவச இணைப்பாக அண்ணன் சினேகனையும். இவன் ஓவியா பேரவை. #BiggBossTamil என ஒருவர் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். ஓவியா பைத்தியம் எந்த அளவுக்கு முத்தியுள்ளது என்று பாருங்கள்.

ஓவியாவுக்கு சிலை செய்யும் அளவுக்கு இந்த ஓவியா ஆர்மிக்காரர்கள் சென்றுவிட்டனர்.

 

    Related News